Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தவளை பீட்ஸா

வாசிப்புநேரம் -
தவளை பீட்ஸா

(படம்: Weibo/Pizza Hut China)

பீட்ஸாவில் mala எனப்படும் மிளகாய் சாஸ்...

அதன் மீது தூவிய கொத்துமல்லி...

பீட்ஸாவின் நடுவே பொரித்த தவளை...

அதில் இரண்டு கண்கள் இருப்பது போன்ற அலங்காரம்...

சீனாவின் Pizza Hut உணவகம் புதிதாக அறிமுகம் செய்துள்ள பீட்ஸா இணையவாசிகள் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

"இதை உணவு என்று அழைக்கமுடியுமா?"

"இப்படியும் பீட்ஸா செய்யப்படுவதை அறிந்தால் இத்தாலியர்கள் என்ன சொல்வார்கள்?"

"ஹலோவீன்தான் முடிந்துவிட்டதே...எதற்கு இது?" என்று சிலர் புலம்பினர்.

சிலரோ பீட்ஸாவைச் சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை என்றாலும் பொரித்த தவளையில் எலும்புகள் இருப்பதை விரும்பவில்லை.

அண்மைக்காலத்தில் தைவான், ஹாங்காங் ஆகியவற்றின் Pizza Hut உணவகங்களும் வித்தியாசமான பீட்ஸாக்களை அறிமுகம் செய்துள்ளன.

தைவானில் ஆமை வடிவத்தில் பீட்ஸா....ஹாங்காங்கில் பாம்பு பீட்ஸா...

அதேபோல் சீனத் தலைநில Pizza Hut உணவகமும் செயல்படுகிறதா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்