வாழ்வியல் trending
முகத்தில் சுருக்கம் இல்லை, மனதில் சோர்வில்லை – 107 வயது பாட்டியின் கதை!
வாசிப்புநேரம் -
சீனாவின் சமூக ஊடகங்களில் தற்போது ஒரு "வயதாகாத பாட்டி" பிரபலமாகி வருகிறார்.
107 வயதான அவருக்கு உடலும் உள்ளமும் இன்றும் இளமைத் துடிப்புடன் இருப்பதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் சிசியாங் (Zhejiang) மாநிலத்தில் உள்ள சிக்ஸி (Cixi) நகரில் வசிக்கும் அந்த மூதாட்டியின் பெயர் டிங் குய்ஜுவான் (Ding Guijuan).
டிங்கின் 84 வயது மகள் சென் சிங்சாவ் (Chen Xingchao) தன் தாயின் ஆரோக்கியம் குறித்துச் சில வியப்பூட்டும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
மருத்துவப் பரிசோதனைகளில் டிங்கின் உடல்நிலை அனைத்து வகையிலும் சீராய் உள்ளதாக South China Morning Post நாளேடு தெரிவித்தது.
முதியவர்களிடையே பொதுவாகக் காணப்படும் உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு மற்றும் அதிகச் சர்க்கரை ஆகிய எவ்வித பாதிப்புகளும் அவருக்கு இல்லை.
107 வயதிலும் அவர் முகத்தில் முதுமைக்கான புள்ளிகளோ சுருக்கங்களோ பெரிதாக இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் அவர் இதுவரை எந்தச் செயற்கை அழகுப் பொருட்களையும் பயன்படுத்தியதே இல்லை!
டிங் நீண்டகாலமாகத் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார்.
சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார்.
84 வயது மகளைவிட 107 வயது தாய்க்குத்தான் நினைவாற்றல் அதிகமாக இருக்கிறதாம்!
டிங்கின் கதையைக் கேட்டு இணையவாசிகள் வியந்து போகின்றனர்.
"அவரது மகளுக்கே 84 வயது ஆகிறது, ஆனால் அவர் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கிறார். நிச்சயம் இது ஒரு நீண்ட ஆயுளுக்கான மரபணுவாக இருக்கவேண்டும்" என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : South China Morning Post