Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

அன்பே வாடகை... பாசமே துணை! 25 வயதில் முதியோர் இல்லத்தில் குடியேறிய பெண்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் ஜியாங்சி (Jiangxi) மாநிலத்தைச் சேர்ந்த ஜாங் ஜின் (Zhang Jin) தனது 22ஆவது வயதிலேயே முதியோர் இல்லத்தில் குடியேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவருக்கு இப்போது வயது 25.

இது ஏழ்மையினால் எடுக்கப்பட்ட முடிவல்ல, அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய முயற்சி.

சுஜோ (Suzhou) நகரில் உள்ள 'யியாங் முதியோர் இல்லம்' (Yiyang Senior House) இளையர்களுக்காக ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது.

குறைந்த வாடகை: சந்தை விலையைவிட 10 மடங்கு குறைவாக, மாதம் சுமார் 200 முதல் 300 யுவான் (சுமார் 37-55 சிங்கப்பூர் வெள்ளி) மட்டுமே வாடகை.

நிபந்தனை: தங்குபவர்கள் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், அந்த நகரில் சொந்த வீடு இல்லாதவராகவும், முழுநேர வேலை செய்பவராகவும் இருக்க வேண்டும்.

பதிலுதவி: வாடகைக்குக் கைமாறாக மூன்று மாதங்களுக்குக் குறைந்தது 45 மணிநேரம் முதியவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

பகல் நேரத்தில் அலுவலகப் பணி...

மாலையிலும் வார இறுதியிலும் இல்லத்தில் உள்ள முதியவர்களுடன் நேரம் செலவழிப்பது...

புதிய நகரத்தில் உறவினர்கள் யாரும் இல்லாத ஜாங்கிற்கு இந்த இல்லம் ஒரு பாதுகாப்பான வீடாக மாறியுள்ளது.

"அலுவலக வேலை தரும் அழுத்தத்தை விட, இங்குள்ள பெரியவர்கள் காட்டும் அன்பு என் மனதிற்குப் பெரிய ஆறுதலைத் தருகிறது," என்கிறார் அவர்.

சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக South China Morning Post நாளேடு தெரிவித்தது.

இந்தப் புதிய முயற்சி இளையர்களின் பொருளாதாரச் சுமை குறைகிறது.

முதியவர்களின் தனிமையைப் போக்கி அவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது.

ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்