Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பட்டமளிப்பு விழாவில் குட்டிக் கரணம் போட்ட இளம் பெண் - வியந்து நின்ற பார்வையாளர்கள்

வாசிப்புநேரம் -
பட்டமளிப்பு விழாவில் குட்டிக் கரணம் போட்ட இளம் பெண் - வியந்து நின்ற பார்வையாளர்கள்

pixabay

சீனாவைச் சேர்ந்த சென் யினிங் (Chen Yining) பட்டமளிப்பு விழாவில் குட்டிக் கரணம் போட்டு அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியுள்ளார். 

முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அவர் அதனைக் கொண்டாடவே உற்சாகத்துடன் அவ்வாறு செய்ததாக SCMP செய்தி நிறுவனம் கூறியது. 

அவரது பட்டமளிப்பு விழா பிரிட்டனில் நடந்தது. 

அவர் குட்டிக் கரணம் போட்டதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

அந்தக் காணொளியை Twitterஇல் பகிர்ந்த இணையவாசி அவர் குங் ஃபூ (Kung fu) விதத்தில் பட்டத்தைப் பெற்றதாகக் கூறினார்.

பல இணையவாசிகள் அந்தக் காணொளியைக் கண்டு அவர்களது கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர். 

அவற்றுள் சில: 

"பட்டம் பெற்ற அந்தப் பெண்மணிக்கு எமது வாழ்த்துகள்!"

"உள்ளம் உவகையில் திளைப்பதே தனி அழகுதான்!" 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்