வாழ்வியல் trending
6 மொழிகளில் பாடும் பாட்டி... மில்லியன் கணக்கில் இணைய ரசிகர்கள்
வாசிப்புநேரம் -
envato elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆங்கிலம் ஓர் எழுத்தும் தெரியாது.
ஆனாலும் ஆங்கிலம் உட்பட 6 மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடுகிறார் லீ டெரு (Li Deru) என்ற சீனப்பாட்டி.
குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் வசிக்கிறார்.
இணையத்தில் ‘ஆன்ட்டி ரூ’ (@Auntie Ru) என்று அறியப்படுகிறார்.
ஆங்கிலம், கொரியா, ஜப்பான், தாய், இந்தி, இத்தாலி ஆகிய மொழிகளில் அவர் கொடி கட்டி பறக்கிறார்.
ரோசே (Rosé), புரூனோ மார்ஸ் (Bruno Mars) பாடிய ‘APT’ பாடலையும் அவர் பாடுகிறார்.
அந்தக் காணொளி 1.6 மில்லியன் விருப்பக் குறிகளைப் பெற்றது.
ரோசேவும் அதைப் பாராட்டினார்.
திருவாட்டி லீ 4 ஆண்டுகள் மட்டுமே தொடக்கப்பள்ளியில் படித்தார்.
ஆங்கிலத்தை அவர் முறையாகக் கற்றதில்லை.
அவரது தாய்மொழி தியோச்சியூ (Teochew). அதில் மட்டுமே பேசுகிறார்.
ஆங்கிலப் பாடல்கள் மீது அவருக்கு எப்போதுமே அளவு கடந்த மோகம்.
6 ஆண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து ஓய்வுபெற்றார்.
உடனே பாட்டு வகுப்பில் சேர்ந்தார்.
ஆங்கில உச்சரிப்புதான் தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்தது.
அதற்காக வித்தியாசமான முறையை உருவாக்கினார்.
ஆங்கிலச் சொற்களுக்குக் கீழே சீன எழுத்துகளைக் குறித்துக்கொண்டார்.
அவற்றை தியோச்சியூ உச்சரிப்பில் படித்து மனப்பாடம் செய்தார்.
குடும்பம் அவருக்கு ஆதரவு தரவில்லை.
அவரது மகன் மட்டும் தொடர்ந்து ஊக்கமளித்தார்.
2023ல் முதன்முறையாக பொதுமேடையில் பாடினார்.
இந்த ஆண்டு மக்காவ் (Macau) நிகழ்ச்சியில் 10,000 பேர் முன்னிலையில் பாடினார்.
இணையத்தில் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகின்றனர்.

ஆதாரம் : South China Morning Post