புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவு நிறைவேறியது
வாசிப்புநேரம் -

pixabay
சீனாவில் 8 வயதுச் சிறுவன் ஒருநாள் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியான கதை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தனர் சீனாவின் ஜினான் (Jinan) நகரைச் சேர்ந்த அதிகாரிகள்.
டாவ்மிங் (Daoming) எனும் அச்சிறுவன் கடந்த 4 ஆண்டுகளாக அரிய வகைப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறான்.
சிறுவனின் மூளையும் மூக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சிறுவனுக்கு 18 chemotherapy சிகிச்சைகளும் 33 radiotherapy சிகிச்சைகளும் 2 அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்பட்டிருப்பதாக அவனது அம்மா சொன்னார்.
மார்ச் 9ஆம் தேதி சிறுவன் 8ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில் அவனது அம்மா ஜினான் போக்குவரத்துக் காவல்துறைக்குச் சமூக ஊடகம் வாயிலாகத் தகவல் அனுப்பினார்.
மறுநாளே அவருக்குப் பதில் வந்தது.
சிறுவனையும் அவனது அம்மாவையும் அழைத்துச்சென்ற அதிகாரிகள் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
சிறுவனுக்குப் பிறந்தநாள் பரிசை வழங்கிய அதிகாரிகள் போக்குவரத்துக் காவல்துறை பயன்படுத்தும் மோட்டார்சைக்கிளில் சிறுவனை அழைத்துச்சென்று சில வேலைகளையும் செய்யச் சொல்லிக் கொடுத்தனர்.
சிறுவனின் கனவை நிறைவேற்றிய போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
சிறுவன் சீக்கிரம் புற்றுநோயிலிருந்து குணமடையவேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகப் பலர் கூறினர்.

ஆதாரம் : Others