Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல் trending

20 வயதில் பிரிந்த கணவர்... 93 வயதில் உருவப்படத்தைக் கண்டு கதறிய மனைவி

வாசிப்புநேரம் -
20 வயதில் பிரிந்த கணவர்... 93 வயதில் உருவப்படத்தைக் கண்டு கதறிய மனைவி

envato elements

வெளியீடு : 02 Jul 2026 08:00AM புதுப்பிப்பு : 02 Jul 2026 11:27AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போரில் உயிரிழந்த தமது கணவரின் முகத்தைச் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பார்த்த 93 வயது சீன மாதின் உருக்கமான சந்திப்பு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் ஹுனான் மாநிலத்தைச் சேர்ந்த சாவோ சுய்ஃபென் (Zhao Cuifen) 1950-களில் சாங் ஜிஷின் (Zhang Zhixin) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான சிறிது காலத்திலேயே அவர் ராணுவத்தில் சேர்ந்தார்.

1953ஆம் ஆண்டு டோங்ஷான் (Dongshan) தீவில் நடைபெற்ற கடும் போரில் 20 வயது சாங் உயிரிழந்தார்.

தம்பதியருக்குக் குழந்தை இல்லை.

அவரது புகைப்படம்கூடக் குடும்பத்தினரிடம் இல்லை.

கணவரின் மரணத்துக்குப் பிறகு சாவோ தினமும் கண்ணீர் வடித்தார்.

மாமனார், மாமியாரை அவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டார்.

அவர்களது விருப்பப்படி கணவரின் உறவினரைத் திருமணம் செய்துகொண்ட சாவோ ஐந்து பிள்ளைகளுக்குத் தாயானார்.

இருந்தாலும், முதல் கணவரின் நினைவை அவர் ஒருபோதும் மறக்கவில்லை.

போரில் உயிரிழந்த வீரர்களின் உருவங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நான்ஜிங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தொண்டூழியக் குழு ஒன்று இறங்கியது.

உறவினர்களின் முக அமைப்பு, குடும்ப நினைவுகள், வரலாற்றுப் பதிவுகள் ஆகியவற்றின் உதவியுடன் சாங் உள்ளிட்ட நால்வரின் உருவப்படங்களை மறுவடிவமைத்தது.

ஜூன் 24ஆம் தேதி அந்த உருவப்படங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கணவரின் உருவப்படத்தைக் கையில் எடுத்த சாவோ, அவரின் இளமைக் கால முகத்தைப் பார்த்ததும் கதறி அழுதார்.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்