Skip to main content
ஆயிரக்கணக்கான தாவரங்கள் அழியும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஆயிரக்கணக்கான தாவரங்கள் அழியும்?

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆயிரக்கணக்கான தாவர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன

'Science' இதழில் வெளியான புதிய ஆய்வு, உலகின் அறியப்பட்ட தாவர இனங்களில் சுமார் 18 விழுக்காடு, அதாவது 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை ஆய்வு செய்துள்ளது.

இதில், 7 முதல் 16 விழுக்காடு தாவர இனங்கள், அவை தழைக்கக்கூடிய 90 விழுக்காட்டுக்கு மேலான இடங்களை இழக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சில தாவரங்கள் முற்றிலும் அழிந்துபோகும் நிலையில் உள்ளன.

கலிஃபோர்னியாவின் அரிய Catalina Ironwood மரங்கள், கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆண்டுகள் மரபைக் கொண்ட spike-moss பாசி இனங்கள்,  ஆஸ்திரேலியாவின் ஆரஸ்பதி இனங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு போன்றவை அழியும் ஆபத்தில் உள்ளன.

தாவரங்களைப் புதிய இடங்களுக்கு நகர்த்துவதால் பிரச்சினை தீராது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றங்களால் அவற்றுக்கான ஏற்ற இடங்கள் குறைந்து வருவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பல்வேறு தாவரங்களின் இழப்பு, கரியமில வெளிப்பாடு, வனவிலங்குகள், உணவு, மருந்துகள் போன்றவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்