குளிரில் வெப்பம், மரங்களில் மாற்றம், பூப்பதில் புதுமை
படம்: Yan Zhao / AFP
This audio is generated by an AI tool.
ஹாங்காங்கில் பளிச்சென்று சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் பிரபல கப்போக் (Kapok) மரங்களில் இம்முறை மாற்றம்...
காரணம்?
பொதுவாக அந்த மரங்களில் பூக்கள் பூப்பதற்கு முன்னர் அனைத்து இலைகளும் உதிர்ந்துவிடும்.
சிவப்பு மலர்களுடன் அழகிய செந்நிறமாக மரம் காட்சியளிக்கும்.
அண்மை ஆண்டுகளாக பச்சைப்பசேல் என்று இலைகளும் உள்ளன, சிவப்பு மலர்களும் பூத்து நிற்கின்றன.
குளிர்காலத்திலும் வெப்பம் - இது மரத்தின் இயல்புநிலையை பாதித்திருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
ஹாங்காங்கில் குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
எப்போதும்போல இல்லாமல் சீக்கிரமாகவே சில மரங்களில் பூக்கள் பூத்திருக்கின்றன.
இலைகளையும் பூக்களையும் ஒரே நேரத்தில் தாங்க இயலாமல் சில மரங்களில் வெகுசில மலர்களே பூத்திருக்கின்றன.
பறவைகளும் தேனீக்களும் மலர்களையே உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.
அதனால் இத்தகைய மாற்றங்களால் வனவிலங்குகளும் பாதிக்கப்படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.