வாழ்வியல் trending
முட்டை டார்ட்டில் கரப்பான்பூச்சியா?
Tiktok/chinapulse2026
This audio is generated by an AI tool.
இனிப்பான முட்டை டார்ட்...
அதன் மேல் மொறுமொறுப்பான பூச்சி!
சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்று வித்தியாசமான இனிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கரப்பான் பூச்சியைப் போலத் தோற்றமளிக்கும் நீர் வண்டுகளை முட்டை டார்ட்டின் மேல் வைத்து விற்கிறது அந்த உணவகம்.
மூன்று டார்ட்டுகளின் விலை 28 யுவான் (சுமார் 5 சிங்கப்பூர் வெள்ளி).
பூச்சிகளைச் சுத்தம் செய்து, துர்நாற்றத்தை நீக்கி, மொறுமொறுப்பாகப் பொரித்துத் தயாரிப்பதாக உணவக உரிமையாளர் கூறுகிறார்.
அவை கரப்பான் பூச்சிகள் அல்ல என்றும் பாரம்பரியச் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் உண்ணக்கூடிய வண்டுகள் என்றும் அவர் விளக்கினார்.
இந்தப் புதுவகை இனிப்பைச் சுவைக்க ஹாங்காங்கிலிருந்தும் குவாங்சோவிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
நாளொன்றுக்குச் சுமார் 20 தொகுப்புகள் விற்பனையாகின்றன.
ஆனால் இணையவாசிகள் பலர் முகம் சுளிக்கின்றனர்.
"பார்ப்பதற்கே முடியவில்லை... சாப்பிடுவதா?" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
விமர்சனங்கள் இருந்தாலும் விற்பனையைத் தொடரப்போவதாக உணவக உரிமையாளர் கூறுகிறார்.