Skip to main content
இளநீர், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

இளநீர், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் - நன்மைகள் அறிவீர்களா?

இந்தியர்களுக்குப் பொதுவாகப் பிடித்த சுவைகளில் ஒன்று தேங்காய்.

வாசிப்புநேரம் -
இளநீர், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் - நன்மைகள் அறிவீர்களா?
வெளியீடு : 11 Jan 2022 01:46PM புதுப்பிப்பு : 11 Jan 2022 03:07PM

இந்தியர்களுக்குப் பொதுவாகப் பிடித்த சுவைகளில் ஒன்று தேங்காய்.

பொதுவாகச் சட்னியாகவும் சாறாகவும் தேங்காய்ப் பாலாகவும் மட்டுமே அதை அறிந்திருந்தோம்.

ஆனால் தேங்காய் சார்ந்த உணவுகள் முக்கியமாக அதன் சுவையில் வரும் பானங்கள், ஐஸ்கிரீம்கள் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ஆனால் இளையர்கள் பலருக்கு இயற்கையான தேங்காய் சார்ந்த பொருள்களின் நன்மைகள் தெரியுமா?

Related article image

இளநீர்:

இளநீர் என்பது வளர்ச்சி அடையாத் தேங்காயில் இருக்கும் நீர். அதைத் தண்ணீருக்குப் பதில் பானமாகக் குடிக்கும் வழக்கம் உண்டு.

இதையே, சிங்கப்பூரில் பதப்படுத்தி சில பானங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் அதை இயற்கையான இளநீராகவே அருந்துவது சிறந்தது.

- அதில் இருக்கும் இயற்கையான கனிமங்கள் பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகின்றன. முக்கியமாக, இதய நலனையும் தசைச் சத்தையும் மேம்படுத்துகின்றன.

- அதிக ஆன்ட்டிஓக்ஸிடன்ட் (Antioxidant) கொண்டவை.

- ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக்கும்

- சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்

Related article image
Pixabay

தேங்காய்ப் பால்

தேங்காய்ப் பால் என்பது தேங்காயிலிருந்து எடுக்கப்படும் சாறு.

அதன் நன்மைகள்
- பால் ஒவ்வாமை உள்ள ஒரு நபர், அளவோடு தேங்காய்ப் பாலை ஒரு மாற்றுத் தேர்வாகப் பயன்படுத்தலாம்

- வயிற்றில் நோய் உண்டாக்கும் பாக்டீரியா சிலவற்றை எதிர்க்கும் ஆற்றல் தேங்காய்ப் பாலுக்கு உண்டு.

- இதயத்தை மேலும் வலுப்படுத்த உதவும்
- இரைப்பைப் புண்ணைத் தவிர்க்க உதவும்

Related article image

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முதிர்ச்சியடைந்த (கொப்பரை) தேங்காயிலிருந்து எடுக்கப்படும் சாறு. இது சமையலிலும் கூந்தலிலும் சருமத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்:

- உடலில் உள்ள நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது.

- தோல் சார்ந்த நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படும்.

- தலைமுடி சேதம் அடையாமல், வறண்டு போகாமல் இருக்க உதவும்.

- சிலவகை மருத்துவத்தில் தேங்காய் எண்ணெய் வாய் கொப்பளிக்கவும் பல் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

தேங்காய் சார்ந்த பொருள்கள் பெரும்பாலும் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

- BBC 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்