Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியமா?

வாசிப்புநேரம் -

தேங்காய் எண்ணெய் அதிசய உணவு என்று பலரால் கருதப்படுகிறது.

உடல் எடை குறைக்க, இதய நோயிலிருந்து பாதுகாக்க, சுருக்கங்களை அகற்ற எனப் பல பிரச்சினைகளுக்குத் தேங்காய் எண்ணெயில் தீர்வு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அது உண்மையா? அறிவியல் என்ன கூறுகிறது?

தேங்காய் எண்ணெயை, ஐஸ்கிரீம் போல் அணுக வேண்டுமாம்.

அதாவது, அதன் சுவைக்காக எப்போதாவது, குறைவான அளவில் உட்கொள்ளலாம்.

வழக்கமாகத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களைக் காட்டிலும், தேங்காய் எண்ணெய்யில் அதிகமான அளவு saturated fat என்னும் நிறை கொழுப்பு உள்ளது.

தேங்காய் எண்ணெய்: 87 விழுக்காடு நிறை கொழுப்பு

வெண்ணெய்: 63 விழுக்காடு நிறை கொழுப்பு

மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு: 40 விழுக்காடு நிறை கொழுப்பு

நிறை கொழுப்பு, ரத்தக் கொழுப்பின் அளவை அதிகரித்து, ரத்தக் குழாய்களை அடைக்கச் செய்யலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்காக, அது உடலுக்கு ஆரோக்கியம் என்று விளம்பரம் செய்யப்படுவதாக The New York Times செய்தி நிறுவனம் சுட்டியது.

இதய நோயிலிருந்து பாதுகாக்கும் என நம்பப்படும் HDL கொழுப்பின் அளவைத் தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் அதிகரிக்கும் என்பது நிரூபணமானது.

எனினும், மனிதர்களிடையே HDL கொழுப்பின் பலன்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று The New York Times சுட்டியது.

அப்போது, தேங்காய் எண்ணெய் எதற்குத் தான் பயனளிக்கும்?

முடிக்கும் சருமத்திற்கும் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

மிகக் குறைவான அளவில் உட்கொண்டால் நல்லது என்பது பொதுவாக நிபுணர்கள் கருத்து.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்