வயதான காலத்தில் நோயில்லாமல் இருக்கக் காப்பி உதவுமா?
Unsplash/David O. Andersen
This audio is generated by an AI tool.
வயதான காலத்தில் நோயில்லாமல் இருப்பதற்குக் காப்பி உதவலாம் என்று ஆய்வொன்று கூறியுள்ளது.
50 வயதாகும் பெண்கள் நாளுக்கு ஒன்று முதல் மூன்று குவளை காப்பி அருந்தும்போது வயதான காலத்தில் நலமுடன் இருப்பதாக அது சொன்னது.
Nurses’ Health Study எனும் கனடா ஆய்வில் 470,000க்கும் அதிகமான பெண்களின் உணவுமுறை ஆராயப்பட்டதாக CNN செய்தி நிறுவனம் சொன்னது.
நடுத்தர வயதில் தொடங்கி அடுத்த 30 ஆண்டுகள் வரை அவர்கள் கவனிக்கப்பட்டனர்.
உடல்நலத்தை மேம்படுத்தவோ அதை நிலைப்படுத்தவோ காப்பிக்கு ஆற்றல் இருக்கலாம் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
எனினும் பெண்கள் வயதான காலத்திலும் நலமுடன் இருக்கக் காப்பி மட்டும் காரணம் என்று சொல்லமுடியாது.
மற்ற அம்சங்களும் உதவியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம் ஆகியவற்றை அவர்கள் உதாரணமாகச் சுட்டினர்.