Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சவப்பெட்டியில் படுப்பதை அனுமதிக்கும் உணவகம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் இறுதிச்சடங்குகள் செய்யும் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்கள் சவப்பெட்டியில் படுப்பதை அனுமதிக்கும் உணவகத்தைத் திறந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் அந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டதாக ஜப்பானின் The Mainchi நாளேடு தெரிவித்தது.

மக்கள் அவர்களது வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதை ஊக்கமளிக்க அந்தச் சேவையை நிறுவனம் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மனச்சோர்வால் அவதியுறுவோர் உணவகத்துக்கு வருவதை நிறுவனம் ஊக்குவிக்கிறது.

அந்த அனுபவத்துக்குப் பிறகு மக்கள் புத்துணர்ச்சி பெறுவர் என்று நிறுவனத்தின் இயக்குநர் கூறினார்.

சவப்பெட்டியில் மக்கள் எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் படங்களும் அவர்கள் எடுக்கலாம்.

இளம் வாடிக்கையாளர்கள் சிலர் அந்தச் சேவையை நாடி முன்வந்துள்ளனர்.

இருப்பினும் சவப்பெட்டியில் இருப்பதைக் கெட்ட சகுனமாகக் கருதுவோர் அது குறித்த கருத்துகளை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்