வாழ்வியல் trending
கையில் துடைப்பானுடன் ஆடி அசத்திய 'துப்புரவாளர்'
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
ஸ்காட்லந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகளில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
துடைப்பானுடன் வந்த ஒருவர் இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளார்.
வலைப்பந்து ஆட்டம் ஒன்றின் இடைவேளையில் அரங்கத்துக்குள் துடைப்பானுடன் வந்தார் சி ஜே மில்லர்.
சிறிது நேரத்தில் அரங்கத்தை அதிர வைத்தார்... நடனமாடி.
இணையத்தில் பரவும் காணொளிகளில் மில்லர் துடைப்பானுடன் சுத்தம் செய்வதைக் காணமுடிகிறது.
திடீரென்று பின்னணியில் இசை ஒலிக்க அவர் ஆட்டத்தில் இறங்குகிறார்.
பார்வையாளர்களைத் தம் வசம் இழுக்கிறார்.
இணையவாசிகள் பலர் துடைப்பானுடன் அவர் ஆடியதைப் பாராட்டினர்.
குறிப்பாக மில்லரின் துடைப்பானுக்குப் புகழ் சேர்கிறது.
உலக ஊடகங்கள் துடைப்பானுக்கு 'டோரிஸ்' என்ற பெயரையும் சூட்டியுள்ளதாக The Guardian ஊடகம் கூறியது.
மில்லர் நடனத்தை விரும்பும் ஒரு துப்புரவாளர் என்று பார்வையாளர்கள் நினைப்பார்கள்.
உண்மையில் அவர் துப்புரவாளரைப்போல் நடித்த நடனமணி.
அவர் விளையாட்டுகளின்போது பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வேலையில் சேர்க்கப்பட்டதாக The Guardian கூறியது.
மில்லர் இப்போது பல்வேறு விளையாட்டுகளில் ஆடி அசத்துகிறார்!