Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வளர்ச்சியடைந்த நாடுகளில் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தவிப்போர் - 25% : கருத்தாய்வு

வாசிப்புநேரம் -
வளர்ச்சியடைந்த நாடுகளில் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கத் தவிப்போர் - 25% : கருத்தாய்வு

(படம்: AP)

உலகப் பொருளியல் அமைப்பு (World Economic Forum) நடத்திய கருத்தாய்வின் மூலம், வளர்ச்சியடைந்த நாடுகளில், கணிசமானோருக்குச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் உள்ளதென்று தெரியவந்துள்ளது. 

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, துருக்கி, பிரிட்டன், பிரான்ஸ், போலந்து, ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த 11 நாடுகளில், Ipsos கருத்தாய்வு நடத்தப்பட்டது. 

- கருத்தாய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானோருக்கு மளிகைப் பொருள் வாங்குவது, வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவது, எரிசக்திக் கட்டணம் கட்டுவது போன்றவை குறித்துக் கவலை இருக்கிறது. 

- பொதுவாக, நால்வரில் ஒருவர் தனிப்பட்ட நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாகக் கருத்தாய்வு முடிவுகள் காட்டின.

- 34 விழுக்காட்டினர், கிடைத்த சம்பளத்தில் வரவுக்கும் செலவுக்கும் சரியாக உள்ளது என்று தெரிவித்தனர். 11 விழுக்காட்டினர், தேவையானதைவிட அதிகமான பணம் வைத்திருக்கின்றனர். 29 விழுக்காட்டினர் வாங்கும் சம்பளம் ஓரளவுக்குப் போதியதுதான் என்றனர். 

- கருத்தாய்வில் கலந்துகொண்டோரில் 79 விழுக்காட்டினர், உணவின் விலை உயரும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர். 

வாழ்க்கை செலவு அதிகரிக்கும்போது மக்கள் வெளியே செல்வதை வெகுவாகக் குறைத்துவிடக்கூடும். 

அதேவேளையில் சிலர் தண்ணீர், உணவு, மின்சாரம் போன்றவற்றுக்குச் செலவழிக்கும் பணத்தையும் குறைத்துவிட முனைவது வழக்கம். 

சிலர் வேலையிடத்தில் சம்பள உயர்வு கோருவர். 

சிலர் பணத்தைக் கடன் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. 

அதிகச் செலவு வைக்கும் முடிவுகளைப் பலர் ஒத்திவைக்கலாம். 

மற்றவர்கள், குறைந்த செலவுள்ள வசிப்பிடத்துக்கு மாறப் போவதாகக் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa