Skip to main content
கடலில் கரையக்கூடிய பிளாஸ்டிக்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

கடலில் கரையக்கூடிய பிளாஸ்டிக்

வாசிப்புநேரம் -
கடலில் கரையக்கூடிய பிளாஸ்டிக்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜப்பானில் கடலில் கரையக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெருங்கடல்களில் குவியும் குப்பையில் பிளாஸ்டிக்கின் அளவு கூடாமல் இருக்க அது உதவலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

புதுவிதப் பிளாஸ்டிக்
வழக்கமான பிளாஸ்டிக் போல் வலுவாக இருந்தாலும் அது கடல்நீர் பட்டவுடன் சிறிய துகள்களாகிவிடும்.

துகள்களை மேலும் கரைக்கக் கடலில் இருக்கும் பாக்டீரியா உதவும்.

பிளாஸ்டிக் கரைந்துவிட சுமார் 3 மணி நேரமே எடுக்கும்.

2040க்குள் பிளாஸ்டிக் குப்பை மும்மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியென்றால் ஆண்டுக்கு 23 பில்லியன் முதல் 37 பில்லியன் கிலோகிராம் பிளாஸ்டிக் குப்பை கடலில் சேரும் என்று கருதப்படுகிறது.

புதுவிதப் பிளாஸ்டிக் பொருள் பொட்டலங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் சுற்றுப்புறத்தின் மீதான பாதிப்பு குறையலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்