Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஏவ்.....!!!மாடுகளின் ஏப்பம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம்

வாசிப்புநேரம் -
ஏவ்.....!!!மாடுகளின் ஏப்பம் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனம்

(படம்: Pixabay)

Microsoft இணை-நிறுவனரும் செல்வந்தருமான பில் கேட்ஸ் (Bill Gates) ஆஸ்திரேலியாவின் பருவநிலைத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார். 

மாடுகள் ஏப்பம் விடும்போது வெளியாகும் மீத்தேன் (Methane) வெப்பவாயுவின் அளவைக் குறைக்க அந்த நிறுவனம் முயல்கிறது. 

பூமியில் அதிகம் நிறைந்துள்ள வெப்பவாயுக்களின் பட்டியலில்  மீத்தேனுக்கு இரண்டாமிடம். முதலிடத்தில் உள்ளது கரியமிலவாயு.  

ஆடு, மாடுகள், மான்கள் போன்ற கால்நடைகள் புல், இலை,தழைகளைத் தின்று செரித்து ஏப்பம் விடும்போது மீத்தேன் வெளியாகிறது. 

அதிக அளவு மீத்தேன், பூமியில்  வெப்பத்தை அதிகமாகத் தங்கச் செய்துவிடும். 

அதைத் தவிர்க்க, ஆஸ்திரேலியா பெர்த்தில் உள்ள Rumin8  நிறுவனம் Red seaweed போன்ற செயற்கைக் கடல் தாவரத்தைக் கலந்து துணைஉணவுப் பொருள் தயாரிக்க முயல்கிறது. 

இதுவரை 12 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருப்பதாக Rumin8 நிறுவனம் சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்