நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்தார் ரொனால்டோ
வாசிப்புநேரம் -
படம்: OSCAR DEL POZO / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரொட்ரிகஸைத்(Georgina Rodriguez ) திருமணம் செய்துள்ளார்.
போர்ச்சுகலின் கஸ்காய்ஸ் (Cascais) பகுதியில் செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது.
ரொனால்டோவும் ஜார்ஜினாவும் திருமண மோதிரம் அணிந்திருக்கும் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.
நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்ற திருமண நிகழ்ச்சியில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 2016-ஆம் ஆண்டு மாட்ரிட்டில் சந்தித்தனர்.
கடந்த ஆண்டு 32 வயது ஜார்ஜினா ரொனால்டோவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார்.
இருவரின் சமூக ஊடகப் பக்கங்களில் 750 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
மான்செஸ்டர் யுனைட்டெட், ரியால் மட்ரிட், யுவெண்டேஸ் போன்ற புகழ்பெற்ற காற்பந்துக் குழுக்களுக்கு விளையாடியவர் 41 வயது ரொனால்டோ.
அவர் தற்போது சவுதி அரேபியாவின் அல்-நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐந்து முறை Ballon d'Or விருது வென்றவர்.
போர்ச்சுகலுடன் 2016 ஐரோப்பியக் கிண்ணத்தையும் வென்றார்.

ஆதாரம் : AFP