Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ரத்தச் சர்க்கரையைக் குறைத்தால் இதய நோய் ஆபத்து பாதியாகக் குறைய வாய்ப்பு

வாசிப்புநேரம் -

நீரிழிவு நோய் ஆபத்து இருப்போர் (Prediabetic) ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் இதய நோய், இதயச் செயலிழப்பால் மரணம் ஏற்படும் சாத்தியத்தைப் பாதியாகக் குறைக்கலாம்.

புதிய ஆய்வொன்றில் அது தெரியவந்ததாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்தது.

அமெரிக்காவில் 38 விழுக்காட்டுப் பெரியவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

அவர்கள் ரத்தத்தில் குளுக்கோஸின்(Glucose) அளவைக் குறைத்ததால் 20 ஆண்டுகளில் இதய நோயால் அவதியுறும் சாத்தியம் பாதியாகக் குறைந்தது.

ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் இருந்தவர்களுடன் அவர்கள் ஒப்பிடப்பட்டனர்.

இன்றைய பழக்கவழக்கங்கள் 20 ஆண்டுகளில் நம்மை எப்படிப் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும் மருத்துவர்கள் அதுகுறித்து மெத்தனமாகச் செயல்படாமல் இருக்கவும் ஆய்வு முடிவுகள் ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : New York Times

மேலும் செய்திகள் கட்டுரைகள்