Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாளொன்றுக்கு 4 கோப்பை தேநீர்.....நோய்களைத் தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு

வாசிப்புநேரம் -

நீங்கள் தினமும் காலையில் தேநீர் குடிப்பீர்களா? 

அது உற்சாகம் மட்டும் தருவதில்லை; உடம்புக்கு அதிக நன்மைகளையும் தரும் என்று சீன ஆய்வு ஒன்று கூறுகிறது. 

'Black tea', Green tea', 'Oolong tea' - இவற்றை நாளொன்றுக்கு 4 முறை அருந்துவோருக்கு நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்கிறது ஆய்வு. 

பத்தாண்டுகளில் அவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கு 17 விழுக்காடு வாய்ப்புக் குறைவு என்று சீனாவின் வூஹான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

8 நாடுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமானோரின் தேநீர் அருந்தும் பழக்கத்தை ஆய்வுகள் ஆராய்ந்தன. 

மொத்தம் 19 ஆய்வுகளை மதிப்பாய்வு செய்து இந்த முடிவுகளைப் பெற்றதாகக் கூறப்பட்டது. 

ஆய்வு, சீனாவில் உள்ள அறியவல் செய்தி சஞ்சிகையில் இடம்பெற்றது. 

நீங்கள் நாளொன்றுக்கு 1, 2 அல்லது 3 கோப்பை மட்டும் தான் தேநீர் அருந்துகிறீர்களா? 

அதனாலும் நன்மை உண்டு என்றது ஆய்வு. 

அவ்வாறு அருந்துவோருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 4 விழுக்காடு குறைவு என்று கூறப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்