Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

செவித்திறன் இல்லை...எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்து சாதித்த மனிதர்

வாசிப்புநேரம் -
செவித்திறன் இல்லை...எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்து சாதித்த மனிதர்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 28 Oct 2026 01:54PM புதுப்பிப்பு : 28 Oct 2026 04:16PM

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் முண்டேஜா (Pradeep Mundeja).

பஞ்சாப் தேசிய வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். 

ஏழு வயதில் கேட்கும் திறனை இழந்தார் திரு முண்டேஜா. ஆனாலும் அவர் ஓய்ந்து போகவில்லை. 

இமயமலையில் 130 கிலோமீட்டர் ஏறிச் சென்று  மலைக்கத்தக்க சாதனையைச் செய்திருக்கிறார். 

இம்மாதம் 13 ஆம் தேதி கடல் மட்டத்திலிருந்து 5,300 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்தார் திரு முண்டேஜா. 

NDTV தொலைக்காட்சி அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 

திரு முண்டேஜா அயராமல் பல மாதங்கள் பயிற்சி செய்தார். செங்குத்தான மலைப்பாதைகள், கடும் குளிர், போதிய அளவு உயிர்வாயு இல்லாதது உள்ளிட்ட  சவால்களை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. 

எவரெஸ்ட் அடிவார முகாமை அடைவது வாழ்நாள் கனவு என்கிறார் திரு முண்டேஜா. 

“கனவுகளுக்குக் காலாவதித் தேதி இல்லை” என்று அவர் தம் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முறையாகத் திட்டமிட்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஒவ்வொருவரும் இலக்கை அடையலாம் என்கிறார் திரு முண்டேஜா. 

பஞ்சாப் தேசிய வங்கி தனது அதிகாரபூர்வ Instagram பக்கத்தில் திரு முண்டேஜாவின் சாதனையைப் பதிவிட்டு அவரைக் கௌரவித்திருக்கிறது. 

ஆதாரம் : Others/NDTV

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்