Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

2.5 மில்லியன் அகல் விளக்குகள் - அயோத்தி சாதனை

வாசிப்புநேரம் -
2.5 மில்லியன் அகல் விளக்குகள் - அயோத்தி சாதனை

(படம்: Niharika KULKARNI / AFP)

இந்தியாவின் அயோத்தி நகரில் அமைந்துள்ள சரயு ஆற்றங்கரையில், மக்கள் 2.51 மில்லியன் அகல் விளக்குகளை ஏற்றித் தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் (Uttar Pradesh) முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்திடம் (Yogi Adityanath) சான்றிதழை வழங்கியது.

ஆயிரக்கணக்கான தொண்டூழியர்கள் விளக்குகளை ஏற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சுமார் 91,000 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

சென்ற ஆண்டின் (2023) சாதனையை (2.2 மில்லியன்) இவ்வாண்டு ஏற்றப்பட்ட விளக்குகளின் எண்ணிக்கை முறியடித்துவிட்டது.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்