வாசனைத் திரவியமா, டியோடரண்டா? எது பொருத்தமானது?
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நல்ல நறுமணம் வேண்டும்...
துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்...
வாசனைத் திரவியம் உண்டு...டியோடரண்ட் (Deodorant) உண்டு...
ஏன்டி-பஸ்பரண்ட் (antiperspirant) உண்டு.
எதைப் பயன்படுத்துவது?
The International Journal of Cosmetic Science சஞ்சிகையில் வெளியான ஆய்வொன்றின்படி...
டியோடரண்ட்
அது துர்நாற்றத்தை குறைத்து நறுமணத்தைக் கூட்டும்.
வியர்வையுடன் பாக்டீரியா கலக்கும்போது துர்நாற்றம் ஏற்படுகிறது.
டியோடரண்ட்டில் பாக்டீரியா உருவாவதைத் தடுக்கும் ரசாயனத்துடன் வாசனை அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன.
ஏன்டி-பஸ்பரண்ட்
அது வியர்வையைக் கட்டுப்படுத்துகிறது.
அதில் கலக்கப்படும் அலுமினியம் சார்ந்த ரசாயனங்கள் வியர்வைச் சுரப்பிகளை அடைத்து வியர்வையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
வாசனைத் திரவியம்
அது நறுமணத்தைக் கூட்டும்.
எண்ணெய், ரசாயனம், தண்ணீர் ஆகியன கலந்து வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது.
டியோடரண்ட்டுடன் ஒப்பிடுகையில் அதில் வாசனை இன்னும் பலமாக வீசும் என்று Revlon ஒப்பனை இணையத்தளம் குறிப்பிடுகிறது.
வாசனைத் திரவியத்திலும் பல ரகங்கள் உள்ளன.
எவ்வளவு எண்ணெய், ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது என்ற அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வாசனை எவ்வளவு நேரம் நிலைக்கும் என்பதை எண்ணெய், ரசாயனத்தின் அளவு நிர்ணயிப்பதாக Sephora ஒப்பனை நிறுவனத்தின் இணையத்தளம் சொன்னது.
- Parfum
எண்ணெயின் பங்கு : 15 - 40%
வாசனை நீடிப்பது : 6 - 8 மணி நேரம்
- Eau De Parfum
எண்ணெயின் பங்கு : 10% - 20%
வாசனை நீடிப்பது : 4 - 5 மணி நேரம்
-Eau De Toilette
எண்ணெயின் பங்கு: 4% - 10%
வாசனை நீடிப்பது : 2 - 3 மணி நேரம்
-Eau De Cologne
எண்ணெயின் பங்கு : 2% - 3%
வாசனை நீடிப்பது : 1 - 2 மணி நேரம்
அப்படி என்றால் எதைத் தேர்ந்தெடுப்பது?
நறுமணம், துர்நாற்றம்...இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைத் தீர்மானித்து சரியான பொருளை வாங்கலாம்!

ஆதாரம் : Others