வாழ்வியல் trending
உணவு, நீரின்றி வளர்த்தவருக்காக காத்திருந்த நாய்
படம்: Envato Elements
This audio is generated by an AI tool.
காவல்துறை அதிகாரியோடு பணியாற்றிய மோப்ப நாயின் உருக்கமான கதை இணையத்தில் 10 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் காவல்துறையில் சுமார் 30,000 மோப்ப நாய்கள் பணியாற்றுகின்றன.
அவற்றில் ஒன்று புளு என்ற ஜெர்மன் ஷெபர்ட்.
மோப்பநாய் அதிகாரியோடு ஒருநாள் போதைப் பொருள் கும்பலை விரட்டிச் சென்றது. அப்போது அதிகாரி கால் இடறி இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டார்.
தலையிலும் நெஞ்சிலும் காயமுற்ற அவர் ஆறு மாதம் சுயநினைவின்றி இருந்தார்.
அவர் வரும்வரை புளு அதிகம் நீர் பருகாமலும், சரியாகச் சாப்பிடாமலும் காத்திருந்தது.
ஒவ்வொரு நாளும் காவல்துறை வாகனம் வரும்போது தன்னுடைய அதிகாரிதான் வந்துவிட்டார் என்று அது ஓடிச் செல்லும். அவர் இல்லை என்றதும் ஏமாற்றத்தோடு திரும்பி வரும்.
ஆறு மாதம் கழித்து அதிகாரி திரும்பி வந்ததும் புளு மீண்டும் உற்சாகம் அடைந்தது.
அதன் கதை இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அதிகாரியும் நாயும் கட்டி அணைக்கும் காட்சிக்கு 590,000 விருப்பக் குறிகள் கிடைத்துள்ளன.
மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையே உள்ள அன்பும் நட்பும் உருகவைப்பதாக இணையவாசிகள் வியந்தனர்.