Skip to main content
30 ஆண்டுகளாகத் திரையரங்கில் ஓடும் திரைப்படம்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

30 ஆண்டுகளாகத் திரையரங்கில் ஓடும் திரைப்படம்...

வாசிப்புநேரம் -
ஒரே திரையரங்கு... ஒரே படம்... 30 ஆண்டுகளாக...

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள மாராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் Dilwale Dulhania Le Jayenge என்கிற இந்திப் படம் 30 ஆண்டுகளாகத் திரையிடப்பட்டுள்ளது.

ஷாருக் கான், காஜல் நடித்த அந்தப் படம் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வெளியானது.

அன்று முதல் இன்றுவரை ஒரு நாள்கூட விடாமல், தினமும் காலை 11.30 மணிக்கு அந்தப் படம் திரையிடப்படுகிறது.

அப்படி யார் அந்தப் படத்தைப் பார்க்கின்றனர் என்று சிலர் எண்ணலாம்...

வார நாள்களில் கல்லூரி மாணவர்கள், இளம் தம்பதியர் படத்தைக் காண வருவதாகத் திரையரங்கின் தலைவர் மனோஜ் தேசாய் (Manoj Desai) கூறினார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 500 பேர் வரை கூடுவது உண்டு என்று அவர் சொன்னார்.

ஒரு பெண் 20 ஆண்டுகளாகப் படத்தைக் காணச் செல்கிறார்.

அவரிடம் கட்டணம்கூட வசூலிப்பதில்லை என்றார் தேசாய்.

2015ஆம் ஆண்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்படவிருந்தது.

ஆனால் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் படம் இன்றுவரை தொடர்கிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்