Skip to main content
சுமார் $47 மில்லியனுக்கு விற்பனையான டைனோசர் எலும்புக்கூடு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சுமார் $47 மில்லியனுக்கு விற்பனையான டைனோசர் எலும்புக்கூடு!

வாசிப்புநேரம் -
சுமார் $47 மில்லியனுக்கு விற்பனையான டைனோசர் எலும்புக்கூடு!

படம்: AP Photo/Yuki Iwamura

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பார்ப்பதற்கு ஒரு குட்டி டி-ரெக்ஸ் (T. rex) போல இருக்கும் டைனோசர் எலும்புக்கூடு...

நியூயார்க் சிட்டியில் நடந்த ஏலத்தில் 47.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது!

'ஜோடி' (Jodi) என்று அழைக்கப்படும் அந்த அரிய எலும்புக்கூடு நானோடைரனஸ் (Nanotyrannus) வகையைச் சேர்ந்தது.

6 முதல் 9 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்து போட்டியாளர்களை முந்திக்கொண்டு அடையாளம் தெரியாத ஒருவர் அதை வாங்கியுள்ளார்.

இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுகளில் இதுதான் இரண்டாவது ஆக அதிக விலை கொண்டது.

சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நானோடைரனஸ், டி-ரெக்ஸின் இளம்பருவ டைனோசர் என்றே நீண்டகாலமாகக் கருதப்பட்டது.

ஆனால் அது தனி வகையைச் சேர்ந்தது என்பதை அண்மைய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

உலகில் இதுபோன்ற மூன்று எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொண்டானா (Montana) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 'ஜோடி', சுமார் 6 மீட்டர் நீளமானது.

அதன் எலும்புக்கூடு கிட்டத்தட்ட 70 விழுக்காடு முழுமையாக உள்ளது.

இருப்பினும், இத்தகைய அரிய புதைபடிவங்களைத் தனியாருக்கு விற்பதற்குச் சில விஞ்ஞானிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சிக்கும் பொதுமக்களின் பார்வைக்கும் அவை அரும்பொருளகங்களில் வைக்கப்பட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்