Skip to main content
கரையோரப் பூந்தோட்டத்தில் வலம் வரவிருக்கும் டைனோசார்கள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கரையோரப் பூந்தோட்டத்தில் வலம் வரவிருக்கும் டைனோசார்கள்!

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டத்தில்
டைனோசார்கள் வலம் வரவிருக்கின்றன.

அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் அந்தக் கண்காட்சி கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள Cloud Forestஇல் இடம்பெறும்.

Jurassic World திரைப்படத்தில் இடம்பெற்ற அம்சங்களை நேரடி அனுபவமாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அடர்ந்த காட்டில் பெரிய டைனோசார்களைக் காணும் அரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

Cloud Forestஇன் நுழைவாயிலில் 8.5 மீட்டர் உயரமுள்ள Brachiosaurus எனும் டைனோசார் பொதுமக்களை வரவேற்கும்.

8.5 மீட்டர் உயரம் என்பது கிட்டத்தட்ட 3 மாடி உயரம்!

டைனோசார்களைத் தவிர, அந்தக் காலத்தில் இருந்த தாவர வகைகளைப் பற்றியும் பொதுமக்கள் கற்றுக்கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு, JurassicWorldExperience.sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்!
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்