Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சருமத்தின் மர்மம்: சாக்லேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டால் முகத்தில் பரு வருமா?

வாசிப்புநேரம் -

எந்த வகை உணவுப் பொருளும் முகத்தில் பருக்களை  உண்டாக்குவதாக அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை. 

முகப் பருக்களுக்கான சில காரணங்கள்:

-- மரபியல்
-- உடலில் நிகழும் வேதியல் மாற்றங்கள் 
-- முகத்தின் எண்ணெய்ச் சுரப்பிகள்
-- கிருமி 

எனினும், சில உணவு வகைகளை உட்கொண்டால், பருக்கள் மோசமடையலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறுகிறார் KK மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன்.

குறிப்பாக, high glycaemic index அதாவது, குறுகிய நேரத்தில் ரத்தத்தின் இனிப்பு அளவை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகள், பருக்கள் மோசமாவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் பருக்களை உண்டாக்குமா?
ghg

நிறைவுற்ற (saturated), Trans கொழுப்பு வகைகள் பருக்களை மோசமாக்குகின்றன எனச் சில ஆய்வுகள் கூறுவதாக டாக்டர் அழகப்பன் குறிப்பிட்டார்.

ஆனால், omega-3 polyunsaturated கொழுப்பு, பருக்கள் உண்டாக்குவதாக பெரும்பாலான ஆய்வுகளில் நிரூபணமாகவில்லை.
 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்