Skip to main content
நீங்கள் அதிகம் பெருமூச்சு விடுகிறீர்களா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

நீங்கள் அதிகம் பெருமூச்சு விடுகிறீர்களா?

வாசிப்புநேரம் -
நீங்கள் அதிகம் பெருமூச்சு விடுகிறீர்களா?

pixabay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பெருமூச்சு விடுவது நல்லதா?

நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

நிபுணர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டது CNA செய்தி.

பெருமூச்சு விடுவோர் நிதானமாக இருப்பார்கள்.

அவர்களின் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைவாக இருக்கும்.
செரிமானமும் சீராய் இருக்கும்.

பதற்றம், பயம் அல்லது பழக்கம் காரணமாக ஆழமாக மூச்சுவிடுவதைத் தவிர்க்கச் சில வேளைகளில் ஒருவர் பெருமூச்சு விடக்கூடும் என்கிறார் இதய, நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜேஸலின் சோவ் ( Jaclyn Chow).

பெருமூச்சு விடுவது ஏன் நல்லது?

மூச்சை ஆழமாக இழுத்துப் பின்னர் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் வெளிவிடும்போது நுரையீரல் நன்கு விரிவடையும். அதனால் உடலில் இருந்து கூடுதல் கரியமிலவாயு வெளியேறும் என்கிறார் சோவ்.

நுரையீரலில் உள்ள பலூன் போன்ற சிறிய alveoli காற்றுப் பைகளைப் பாதுகாக்கவும் பெருமூச்சு உதவுகிறது. நுரையீரலின் விரிந்துகொடுக்கும் தன்மையை மீட்டுக்கொடுக்கிறது. உயிர்வாயுவும் கரியமிலவாயுவும் அதிகரிக்கும்போதோ குறையும்போதோ அதனை சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஒருவர் விழித்திருக்கும்போது 5 நிமிடத்திற்கு ஒருமுறை பெருமூச்சு விடுகிறார். ஒரு மணி நேரத்தில் அவர் 12 முறை பெருமூச்சு விடுகிறார்.

பெருமூச்சுக்கும் ஆழ்ந்த சுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம்?

பெருமூச்சு விடுவது என்பது ஆழ்ந்த சுவாசம் போன்றதுதான் என்கிறார் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் சுவாச நிபுணர் டாக்டர் ஸ்டீவ் யாங் (Dr Steve Yang).

ஆனால் பெருமூச்சு விட நீண்ட நேரம் எடுக்கிறது.

ஆழ்ந்த சுவாசம் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது மிக விரைவாக நடைபெறுகிறது.

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளைக் கவனமாய் மேற்கொள்ள வேண்டும். தவறானால் அது hyperventilation எனும் மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும் என்றார் சோவ்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்