Skip to main content
மனித
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனித-நாய் நட்பு - 15,000 ஆண்டுக்கு முன்பு பிறந்தது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாய் மனிதனின் நண்பன்.

இது நாய்க்கும் தெரியும் மனிதருக்கும் தெரியும்.

ஆனால் தெரியாதது அந்த நெருங்கிய நட்பின் மிக நீண்ட வரலாறு.

பிரிட்டனில் Somerset பகுதியில் குகைக்கு அடியில் காணப்பட்ட நாயின் தாடை எலும்பு ஒரு புதிய கதையைச் சொல்கிறது.

அதன் மரணுவைச் சோதித்தபோது நாய்-மனிதர் உறவு நாம் நினைத்ததைவிடத் தொன்மையானது என்பது தெரியவந்தது.

பண்ணை விலங்குகளை மனிதர்கள் அழகாக அடிமைப்படுத்தி அவற்றை உணவாக்கிக் கொண்டனர்.

பூனைகளை வீட்டுக்குள் அழைத்து வந்து பழக்கினர்.

அதெல்லாம் நடப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே நாயுடன் நட்பு மலர்ந்து விட்டது என்கிறது மரபணுச் சோதனை மூலம் கிடைத்த புதிய வரலாறு.

பனியுகத்தின் முடிவில் சாம்பல் நிற ஓநாய்கள் மனிதர்களின் முகாம்களை நோக்கி வந்தன. மனிதர்கள் விட்டுச்சென்ற மிச்ச உணவை உண்டன. மெல்ல கோபம் தணிந்து சாதுவாகி நட்போடு வாலை ஆட்டின.

காலப்போக்கில் மனிதர்கள் இந்த நாய்களைத் துணையாக எடுத்துக் கொண்டனர். வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

நாய்க்கும் மனிதருக்கும் இடையே பங்காளித்துவம் பிறந்தது.

மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாத அளவுக்குப் பாசத்துக்கு அடிமையாகிவிட்டன.

இந்தக் கதை தொடங்கி 15,000 ஆண்டாகிவிட்டது என்பது விஞ்ஞானிகளை மலைக்க வைக்கிறது.

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்