Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஒரு மில்லியன் டாலருக்கு விலைபோன பிரபல சொல்லிசைக் கலைஞரின் மோதிரம்... வாங்கியது யார்?

வாசிப்புநேரம் -
பிரபல சொல்லிசைக் கலைஞரான டூபக் ஷகுரின் (Tupac Shakur) மோதிரத்தை ஒரு மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வாங்கியது யார் என்பது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞர் டிரேக் அந்த மோதிரத்தை அணிந்தவாறு எடுத்தப் படத்தைத் தமது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த மோதிரம் அதிகபட்சம் 300,000 டாலருக்குதான் விலைபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி ஷகுர் கடைசியாக மக்களைச் சந்தித்தபோது மாணிக்கம், வைரம் பதித்த மகுடம் போன்று தோற்றமளிக்கும் அந்தத் தங்க மோதிரத்தை அணிந்திருந்தார்.

சில நாள்கள் கழித்து செப்டம்பர் 13ஆம் தேதி அவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது அவருக்கு 25 வயது.

அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது இன்று வரை தெரியவில்லை.

ஷகுர் ஆகச்சிறந்த சொல்லிசைக் கலைஞர்களில் ஒருவராகப் பலரால் விரும்பப்படுகிறார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்