சூடான வானிலையில் சூடான பானமா? அது உண்மையில் சூட்டைத் தணிக்க உதவலாம்

(படம்: Pexels)
சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்பானங்களையும் குளிரான நாள்களில் சூடான பானங்களையும் நம்மில் பலர் அருந்துவோம்.
சூடான வானிலையில் சூடான பானத்தை அருந்துவது உண்மையில் சூட்டைத் தணிக்க உதவலாம் என்று தெரியுமா?
BBC செய்தி நிறுவனத்தின் Trust Me, I'm a Doctor எனும் நிகழ்ச்சி இங்கிலாந்தின் Nottingham Trent பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்தியது.
அதில் ஒருவர் குளிர் பானத்தையும் சூடான பானத்தையும் அருந்தினார்.
அவரது உடல் வெப்பநிலையும் வியர்வையும் ஆராயப்பட்டது.
குளிர்பானம் குடித்தாலும், சூடான பானம் குடித்தாலும் உடலின் வெப்பநிலை அவ்வளவாக மாறவில்லை என்று தெரியவந்தது.
ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் நடத்தப்பட்ட சோதனையிலும் அத்தகைய முடிவு கிடைத்ததாக BBC சொன்னது.
பானம் சூடாக இருந்தாலும் குளிராக இருந்தாலும் வெப்பநிலையைச் சுமார் 37 டிகிரி செல்சியஸாக வைத்திருக்க உடல் முனைகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர்.
சூடான பானம் என்றால் உடலில் வியர்வை வேகமாக உற்பத்தியாகும்.
குளிரான பானம் என்றால் வியர்வை மெதுவாக உற்பத்தியாவதாகக் கூறப்பட்டது.
வியர்வை சூட்டை நீக்க உதவுகிறது.
காற்றில் ஈரப்பதம் அதிகமுள்ள வானிலையில் வியர்வை எளிதில் காய்ந்துபோகாது.
அந்நிலையில் குளிர்பானங்களைக் குடிக்கலாம் என்று Ottawa பல்கலைக்கழகத்தின்
மனித இயக்கவியல் பள்ளி Smithsonian சஞ்சிகையிடம் சொன்னது.