Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இப்படி மழை பெய்தால் எப்படித் துணிகளைக் காய வைப்பது?

வாசிப்புநேரம் -
தொடர்ச்சியாக மழை பெய்யும்போது ஒருவர் பல சிரமங்களை எதிர்நோக்கக்கூடும். அவற்றில் ஒன்று - துணிகளைக் காயவைப்பது...

பொதுவாகப் பலரும் துணிகளை வெளியில் கம்பத்தில் தொங்கவிட்டுக் காயவைக்கின்றனர். இதுபோன்ற மழைக்காலத்தில் அதைச் செய்யமுடியாமல் போகிறது.

வீட்டிற்குள் நிழலில் உலர்த்தப்படும் துணிகளோ எளிதில் காய்வதில்லை.

என்ன செய்யலாம்?
ஓர் உடையை 2 மூன்று முறை வரை அணியமுடியும்... அதிக வியர்வையோ அழுக்கோ இல்லாதபட்சத்தில்.

ஜீன்ஸ், கம்பளி போன்ற அடர்த்தியான துணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மெல்லிய துணிகளைப் பயன்படுத்தலாம். அவை, சீக்கிரமாகக் காயும் தன்மை கொண்டவை.
ஒரு சில நாள்கள் காயவைத்தும் துணிகள் சற்று ஈரமாக இருந்தால், அவற்றுக்கு இஸ்திரி போடலாம்.
துணிகளைக் காயவைக்கும் உட்புற இடத்தில் மின்விசிறியின் உதவியுடன் காற்றோட்டத்தை அதிகரிக்கலாம். ஈரத்துணிகளின் மீது படும் காற்று அவற்றை மேலும் விரைவாகக் காயவைக்க உதவும்.
இரவில் துணிகளை அலசிக் காய வைக்கலாம். உட்புறத்தில் உலர்த்தும்போது கூடுதல் நேரம் இருக்கும். மறுநாள் மதிய வேளைக்குள் காய்ந்துவிடும்.

சில சலவை இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் turbo எனும் அதிவேகச் சுழற்சி செயல்பாட்டைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் துணிகளில் இருக்கும் ஈரத்தன்மை வெளியேறிவிடும்; துணிகள் விரைவில் காயும்.
 

ஆதாரம்: Readers' Digest

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்