Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஐரோப்பாவுக்குச் செல்லும் 'துபாய் சாக்லேட்'

வாசிப்புநேரம் -
சாக்லேட்டைப் பாதியாக உடைத்தால்...உள்ளே பச்சைப் பசேலென பசை சிந்தும்...அதில் வறுத்த சேமியா போன்ற மாவுத் துண்டுகள் இருக்கும்...

சமூக ஊடகத்தில் அண்மையில் அதிகம் காணப்பட்ட 'துபாய் சாக்லேட்' அதுவே.

உணவுப் பிரியர்களில் பலர் அதை வீட்டில் செய்து பார்த்திருப்பார்கள்.

ஐரோப்பாவின் பிரபலமான சாக்லேட் தயாரிப்பாளர்களையும் அது இப்போது கவர்ந்துள்ளது.

180 ஆண்டுகளாகச் செயல்படும் Lindt நிறுவனம் சிறப்பாக 1,000 சாக்லேட்களை ஜெர்மனியில் அறிமுகம் செய்துள்ளது.

ஆளுக்கு ஒரு சாக்லேட் மட்டுமே வாங்கமுடியும்...

அதை நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று வாங்குகின்றனர்.

விரைவில் சுவிட்சர்லந்திலும் சாக்லேட்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'துபாய் சாக்லேட்' முதன்முதலில் 2021இல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்