சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்திற்கு $6.2 மில்லியன்?
வாசிப்புநேரம் -
படம்: kena betancur / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நியூயார்க் நகரில் ஏலத்தில் விடப்பட்ட சுவரில் ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் 6.2 மில்லியன் டாலருக்கு விலைபோனது.
"Comedian" எனும் பெயர்கொண்ட அந்தப் படைப்பு இத்தாலிய கலைஞர் மௌரிஸியோ கட்டலனுக்குச் (Maurizio Cattelan) சொந்தமானது.
அவர் அந்தக் கலைப்படைப்பை முதன்முதலில் 2019ஆண்டு வெளியிட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.
3 முறை ஏலத்தில் விடப்பட்ட அந்தக் கலைப்படைப்பு 120,000 டாலர் முதல் 150,000 டாலர் வரை விலைபோனது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு Sotheby’s நிறுவனத்தின் ஏலத்தில் அந்தக் கலைப்படைப்பு மீண்டும் ஏலத்தில் விடப்பட்டது.
முதலில் 800,000 டாலருக்கு ஏலம் தொடங்கியது.
சில நிமிடங்களிலேயே தொகை 4 மில்லியன் டாலர் வரை உயர்ந்தது.

ஆதாரம் : AP