Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

dark chocolate சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையலாம் - ஆய்வு

வாசிப்புநேரம் -
சாக்லேட் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் என்று பெரியவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு.

ஆனால் புதிய ஆய்வொன்று முரணான கருத்தைச் சொல்கிறது.

dark chocolate எனும் இனிப்புக் குறைவான அல்லது இனிப்பில்லாத சாக்லேட் வகையைச் சாப்பிடுவதால் Type 2 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையலாம் என்று தெரியவந்துள்ளது.

ஆய்வில் சராசரியாக 25 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட 3 ஆராய்ச்சிகளின் முடிவுகள் பயன்படுத்தப்பட்டன.

பொதுவாக சாக்லேட் சாப்பிட்ட சுமார் 192,000 பேரும் dark chocolate, milk chocolate எனக் குறிப்பாகச் சாப்பிட்ட சுமார் 112,000 பேரும் பங்கேற்றனர்.

அவர்களுக்கும் Type 2 நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு கவனிக்கப்பட்டது.

வாரத்துக்கு 5 முறை...ஒவ்வொரு முறையும் 28 கிராம் சாக்லேட் சாப்பிடும்போது... Type 2 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம்

பொதுவாக சாக்லேட் சாப்பிடும்போது - 10% குறைவு

dark சாக்லேட் சாப்பிடும்போது - 21% குறைவு

milk சாக்லேட் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியம் குறையவில்லை.

அதை அதிகம் சாப்பிடுவதால் எடை கூடும் சாத்தியம் இருந்ததாக BMJ சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இருப்பினும் முடிவுகளை உறுதிசெய்யக் கூடுதல் சோதனைகள் செய்யப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆதாரம் : Others/The Guardian

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்