Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உணவில் உப்பு தேவையில்லை..மின்சார chopsticks போதும்

வாசிப்புநேரம் -
உணவில் உப்பு தேவையில்லை..மின்சார chopsticks போதும்

(படம்: meiji.ac.jp)

உணவின் சுவைக்கு உவர்ப்பைச் சேர்க்க உதவும் மின்சார chopsticks எனும் குச்சிகளை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

உணவுமுறையில் சோடியம் தாதுவைக் குறைக்கத் தேவையுள்ளவர்களுக்கு அது உதவும் என்று நம்பப்படுகிறது.

மின்சார chopsticks-ஐப் பயன்படுத்துவோர் கைப்பட்டை ஒன்றை அணியவேண்டும்.

கைப்பட்டையிலுள்ள சிறு கணினி, மின்சாரம் வழி உணவில் உள்ள சோடியம் மின்னணுக்களை (sodium ions) குச்சிகள்மூலம் வாய்க்கு அனுப்பும். அப்போது வாயில் உவர்ப்பின் சுவையை உணரமுடியும்.

உவர்ப்பின் சுவை 1.5 மடங்கு அதிகரிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

ஜப்பானிய உணவில் உவர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.

பொதுவாகப் பெரியவர்கள் நாளொன்றுக்கு 10 கிராம் உப்பை உட்கொள்கின்றனர்.

அது பரிந்துரைக்கப்பட்ட அளவில் இரு மடங்கு.

அதிக அளவில் சோடியத்தை உட்கொள்வதனால் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்