190 மில்லியன் பெண்களைப் பாதிக்கும் Endometriosis
வாசிப்புநேரம் -
envato elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகெங்கும் சுமார் 190 மில்லியன் பெண்கள் Endometriosis எனும் கருப்பையைப் பாதிக்கும் நோயால் அவதியுறுகின்றனர்.
இந்தத் தகவலை உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இடுப்புப் பகுதியின் உட்புறத்தில் உள்ள உயிரணுக்கள் வேறு உறுப்புகளில் வளர்கின்றன.
இதனால் வீக்கம், ரத்தக்கசிவு, கடுமையான வலி போன்றவை ஏற்படுகின்றன.
சில பெண்கள் மட்டுமே இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து உதவி பெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சோயி ஆர்ம்ஸ்திரோங் (Zoë Armstrong) என்பவருக்கு endometriosis இருப்பது தெரியவந்தது.
தமக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று தெரியாமல் பல ஆண்டு அவதியுற்றபின் மருத்துவர்களின் உதவியை நாடினார்.
நோய் இருப்பதை உணர்ந்ததும் இவரது கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது; வாழ்க்கையில் புதுத் தெளிவு பிறந்தது.
அவரைப் போன்று endometriosis நோய் இருப்பதை அறிவதற்குப் பத்தாண்டுக்குமேல் எடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அது ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இது மரபணு வழியாக வருவதற்கு வாய்ப்புண்டு; இதற்குத் தீர்வு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
இருந்தும் பெண்கள் வலியை அலட்சியப்படுத்தக்கூடாது; அதற்கான சிகிச்சையை நாடவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

ஆதாரம் : Others