Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'அனுபவம் இல்லையா? சுயவிவரக் குறிப்பு கூட இல்லையா? பரவாயில்லை வேலை தருகிறோம்!'

வாசிப்புநேரம் -

வேலை அனுபவம் அல்லது Resume எனப்படும் சுயவிவரக் குறிப்பு இல்லாமல் பணியமர்த்தப்படுவது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

ஐரோப்பாவில் தற்போது அதுதான் நிலைமையே!

கிருமிப்பரவல் சூழலில், அனைத்துலகப் பயணத்துறையில் தடை ஏற்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உணவு, உபசரிப்புத் துறையை விட்டு வெளியேறினர்.

கூடுதல் ஊதியம் அளிக்கும் வேறு வேலையைத் தேடிச்சென்ற அவர்கள் உபசரிப்புத் துறைக்குத் திரும்பிவர வேண்டாம் என்று முடிவுசெய்ததே பெரும் பற்றாக்குறைக்குக் காரணம்.

ஸ்பெயினின் உணவு விநியோகத் துறையில் 200,000 ஊழியர்களும் போர்ச்சுகலின் ஹோட்டல்களில் குறைந்தது 15,000 ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் ஆகப் பெரிய ஹோட்டல் நிறுவனமான Accor நிறுவனம், உலகளவில் 35,000 ஊழியர்கள் தேவை என்று தெரிவித்துள்ளது.

சுயவிவரக் குறிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும் சரி... முன் வேலை அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி...

நேர்முகத் தேர்வுகளுக்குப் பிறகு,
அவர்கள் 24 மணி நேரத்திற்குள் பணியமர்த்தப்படுவதாக நிறுவனம் சொன்னது.

பயிற்சிக்காலம் 6 மணிநேரம் மட்டுமே.

ஊழியர்களை ஈர்க்க, ஐரோப்பிய ஹோட்டல் நிறுவனங்கள் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம், போனஸ் போன்றவற்றை அளிக்கின்றன.

ஊழியர் பற்றாக்குறை நீடித்தால், வாடிக்கையாளரின் எண்ணிக்கை, சேவைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலை ஏற்படலாம் என்று சில நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்