Skip to main content
அளவுக்கு மிஞ்சினால் புரதச்சத்தும் நஞ்சு!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

அளவுக்கு மிஞ்சினால் புரதச்சத்தும் நஞ்சு!

வாசிப்புநேரம் -
அளவுக்கு மிஞ்சினால் புரதச்சத்தும் நஞ்சு!

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புரதச்சத்து. இது நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கிய ஊட்டச்சத்து.

தற்போது பொட்டலமிடப்பட்ட தானியங்கள், சோளப்பொரி, பேன்கேக் (pancake) மாவு, காப்பி ஆகியவற்றிலும் புரதச்சத்து சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால்… புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்?

இதய நோய், வகை 2 நீரிழிவு நோய் வரலாம்

செந்நிற இறைச்சி (red meat), பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்வோருக்கு இந்த இரு நோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய இறைச்சிகளில் Saturated Fat எனும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இதனால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு உயரலாம், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படும் வாய்ப்பும் உயரும்.

புற்றுநோய் ஏற்படலாம்

செந்நிற இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது மலக்குடல் வாய்ப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கிறது.

தாவரப் புரதங்களான பருப்பு, கொட்டைகள், அல்லது மீன், தயிர் முதலியவை ஆரோக்கியமான மாற்றுத் தெரிவுகள்.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்குக் குறிப்பிட்ட சில வகையான புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறைகிறது.

மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகள்…

புரதச்சத்தை அதிகமாக உட்கொள்வதில் கவனம் செலுத்தும் பெரும்பாலானோர் தங்களை அறியாமலே நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை அல்லது குறைத்துவிடுகின்றனர்.

குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நார்ச்சத்து அவசியம் என்று New York Times ஊடகத்திடம் பேசிய நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

உடல் எடை அதிகரிக்கலாம்

உடல் எடையைக் குறைக்கவோ தசைகளை வலுப்படுத்தவோ புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற கூற்று சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

ஆனால் போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாவிட்டால் மீதமுள்ள கலோரிகள் கொழுப்பாக மாறும்.

புரதச்சத்தும் இதில் அடங்கும்.

சிறுநீரகங்களில் கற்கள் உருவாகலாம்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால் சிறுநீரகச் சுத்திகரிப்பு தேவைப்படுவோர் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் புரதச்சத்தை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகச் செயல்பாடு குறையலாம்.

சிறுநீரகக் கற்களும் ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் அபாயம் சற்று குறையும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்