Skip to main content
ஓய்வில்லாப் பயிற்சி, பலனில்லா முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஓய்வில்லாப் பயிற்சி, பலனில்லா முயற்சி

வாசிப்புநேரம் -
உடலைக் கட்டழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்.

இப்போது சமூக ஊடகத்தில் பலரும் பல உடற்பயிற்சிகளைச் செய்து ஆரோக்கியமாக வாழ்வதை தினந்தோறும் பதிவுகள் வழி பகிர்கின்றனர்.

அதனைக் கண்டு ஊக்கம் பெறுவோர் அவர்களும் நடனம், பலவகையான உடற்பயிற்சி போன்ற ஏராளமான வகுப்புகளுக்குப் பதிந்துகொள்கின்றனர்.

ஆனால் அளவுக்கு மீறிய உடற்பயிற்சி உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலுறுதியைத் தருவதற்குப் பதில் அத்தகைய அதிகமான தொடர் உடற்பயிற்சிகள் சோர்வை ஏற்படுத்தக்கூடும்.

சில வேளைகளில் மன அழுத்தத்தையும் உடலில் காயத்தையும்கூட ஏற்படுத்தலாம் என்று உடலுறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்குக் கைத்தொலைபேசியை மின்னூட்டம் செய்யாமல் ஒரே நேரத்தில் பல செயலிகளைப் பயன்படுத்தினால் அது செயலிழக்க வாய்ப்புள்ளதல்லவா?

ஆதேபோல் நமது உடல் ஓய்வின்று தினந்தோறும் ஓடிக்கொண்டே இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையானவற்றை நீங்களே தேர்ந்தெடுத்து முழுக்கவனத்துடன் திட்டமிட்டுச் செய்வது சிறந்தது.

வேகநடை, நீச்சல், சைக்கிளோட்டம் எனப் பிடித்ததைத் தனியாகவோ அன்புக்குரியவகளுடனோ செய்யலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஒரு வாரத்துக்கு இத்தகைய நடவடிக்கைகளில் சில முறை ஈடுபடலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மனதுக்குப் பிடித்த துடிப்பான நடவடிக்கைகள் போன்றவற்றைத் தொடர்ந்து செய்தால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்