Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Selfieஐ வைத்து உயிரியல் வயதையும் சிகிச்சையையும் முடிவு செய்ய முடியுமா?

வாசிப்புநேரம் -
மருத்துவர்கள் முன்பு கண்களைச் சோதித்து உயிரியல் வயதையும் உடல்நலனையும் பற்றி அறிவார்கள். இப்போது கண்களைச் சோதிக்கவேண்டிய அவசியம் இல்லை.

செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதே!

நோயாளிகள் selfie எடுத்து, அதை FaceAge எனும் செயற்கை நுண்ணறிவுக் கருவியிடம் கொடுக்கவேண்டும்.

அது உடல்நலனைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிடும். குறிப்பாக, உயிரியல் வயதை அது கூறிவிடும்.

Lancet மருத்துவ சஞ்சிகையில் FaceAge பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உயிரியல் வயதும் உண்மையான வயதும் ஒரே வயதாக இருக்கும் என்ற அவசியம் இல்லை.

உடல்நலன் குறைபாடு இருந்தால் உயிரியல் வயது உண்மையான வயதை விட அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

FaceAgeஐ வைத்து உயிரியல் வயது என்னவென்பதை தீர்மானம் செய்துவிட்டு பொருத்தமான சிகிச்சையை வழங்க முடியும்.

இவ்வாறு, ஒருவருக்கு உயிரியல் வயது அதிகமாக இருந்தால் அவர்களுக்குக் குறைவான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய, மென்மையான சிகிச்சை வழங்கப்படும்.

FaceAgeஐ மருத்துவர்கள் பெரும்பாலும் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்த வாய்ப்புண்டு. அதை வைத்து அவர்களுடைய உயிரியல் வயதை அறிந்து, அதற்கேற்ப தக்க சிகிச்சை வழங்கமுடியும்.

 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்