Skip to main content
சாப்பிட்ட பிறகு நடப்பது உடல்நலனை எப்படி மேம்படுத்தும்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சாப்பிட்ட பிறகு நடப்பது உடல்நலனை எப்படி மேம்படுத்தும்?

வாசிப்புநேரம் -
சாப்பிட்ட பிறகு நடப்பது உடல்நலனை எப்படி மேம்படுத்தும்?

படம்: envato.com

வெளியீடு : 14 Jul 2025 05:54PM புதுப்பிப்பு : 14 Jul 2025 05:59PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சாப்பிட்ட பிறகு பலர் நெடுந்தூரம் நடக்கிறார்கள். (நடக்குகிறார்கள் என்று எழுதக்கூடாது)

அந்தப் பழக்கம் TikTok தளத்தில் "fart walking" எனும் பெயரில் பிரபலமாகியிருக்கிறது.

உணவு உண்ட பிறகு நடப்பது உடல்நலனைப் பல வகையில் மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நெஞ்சு எரிச்சல் குறையும். செரிமானத்தைத் தூண்டும்.

சாப்பிட்ட பிறகு நடப்பதால் உணவில் உள்ள சர்க்கரையை உடல் பயன்படுத்த உதவும். முக்கியமாக, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்தப் பழக்கம் பயனளிக்கும்.

எந்த நோயும் இல்லையென்றாலும் இந்தப் பழக்கம் உடலுக்கு நன்மையளிக்கும்.

உணவில் இருக்கும் ஊட்டச்சத்தைப் பயன்படுத்த சாப்பிட்ட பின் நடப்பது ஊக்குவிக்கும்.

இதய நோய்களைத் தவிர்ப்பதற்கும் இந்தப் பழக்கம் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இளையர்களிலிருந்து மூத்தோர்வரை அனைவரும் இந்தப் பழக்கத்தால் பயனடைவர்.

குடல் எரிச்சலால் அவதிப்படுவோர் அதிகப் பலன் பெறுவர்.

சாப்பிட்டு 10 அல்லது 15 நிமிடங்களுக்குப் பிறகு நடப்பது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள்வரை நடந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

நடக்கமுடியாத நாள்களில் வீட்டிலேயே எளிதான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். குறிப்பாக, சில யோகா ஆசனங்களைச் செய்தால் அதே பலன்களை அடையலாம்.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்