Skip to main content
யார் குண்டான கரடி? மாபெரும் போட்டி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

யார் குண்டான கரடி? மாபெரும் போட்டி!

வாசிப்புநேரம் -
யார் குண்டான கரடி? மாபெரும் போட்டி!

படம்: E.Johnston/National Park Service via AP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கோடைக்காலம் முழுவதும் சாமன் மீன்களை வயிறாரச் சாப்பிட்டாயிற்று.

இப்போது அலாஸ்காவின் (Alaska) பழுப்புக் கரடிகளுக்கு ஒரே கேள்விதான் — யார் மிகவும் குண்டான கரடி?

அதற்கான ‘ஃபேட் பேர் வீக்’ (Fat Bear Week) இணைய வாக்களிப்பு நேற்று தொடங்கியது.

காட்மாய் தேசியப் பூங்காவில் (Katmai National Park) வாழும் 16 கரடிகள் இம்முறை போட்டியிடுகின்றன.

பொதுமக்கள் இணையத்தில் தங்களுக்குப் பிடித்த கரடிக்கு வாக்களிக்கலாம்.

வெற்றியாளர் செப்டம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்படுவார்.

கடந்த ஆண்டு வென்ற ‘சங்க்’ (Chunk) மீண்டும் களத்தில் உள்ளது.

2025ல் அதன் எடை சுமார் 1,200 பவுண்டாக மதிப்பிடப்பட்டது.

இம்முறை ‘கல்லி’ (Gully) உள்ளிட்ட கரடிகள் அதற்குக் கடும் போட்டியாக உள்ளன.

இது வெறும் ‘குண்டான கரடி’ போட்டியல்ல.

குளிர்கால உறக்கத்தைச் சமாளிக்கக் கரடிகள் போதுமான கொழுப்பைச் சேமித்துள்ளனவா என்பதையும் இது காட்டுகிறது.

ஒரு பெரிய ஆண் கரடி நாளொன்றுக்கு 30 சாமன் மீன்கள் வரை சாப்பிடலாம்.

குளிர்கால உறக்கத்தின்போது அவை தங்கள் உடல் எடையில் மூன்றில் ஒரு பகுதியை இழக்கின்றன.

அதனால் இங்கு ‘குண்டாக இருப்பது’ வெற்றியின் அடையாளம்!
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்