உலகக்கிண்ணத் திடலின் புல் வேண்டுமா? $450!
வாசிப்புநேரம் -
envato elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ண காற்பந்து இறுதிப்போட்டி நடைபெறவுள்ள திடலின் புல்தரைத் துண்டுகளை FIFA விற்பனைக்கு வைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி (New York New Jersey) திடலில் நடைபெறும் இறுதிப்போட்டிக்குப் பிறகு அவை வாங்குபவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
புல்தரைத் துண்டுகள் அவற்றின் இயல்பைப் பாதுகாக்கும் வகையில் பிசினில் பதப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றின் ஆரம்ப விலை 450 டாலர் (581 வெள்ளி).
இறுதிப்போட்டியின் முடிவு, தேதி, உலகக்கிண்ணத்தின் சின்னம் உள்ளிட்ட விவரங்களும் அதில் இடம்பெறும்.
மேலும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் காணொளி அடங்கிய USB சாதனமும் வழங்கப்படும்.
450 டாலர் முதல் 3,000 டாலர் வரை நான்கு வகைகளில் இந்த நினைவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு வகையிலும் 2,026 பொருள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.
அனைத்தும் விற்றுத்தீர்ந்தால் 11.2 மில்லியன் அமெரிக்க டாலருக்குமேல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத் திடல்களின் புல்தரை அல்லது மண்ணை நினைவுப்பொருளாக விற்பனை செய்வது அண்மைக் காலங்களில் அதிகரித்திருக்கிறது.

ஆதாரம் : Others