Skip to main content
3,000 பேர்... 500 அடுப்புகள்... ‘பார்பிக்யூ’ உலகச் சாதனை முயற்சி!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

3,000 பேர்... 500 அடுப்புகள்... ‘பார்பிக்யூ’ உலகச் சாதனை முயற்சி!

வாசிப்புநேரம் -
3,000 பேர்... 500 அடுப்புகள்... ‘பார்பிக்யூ’ உலகச் சாதனை முயற்சி!

படம்: AP Photo/Alfonso Nqunjana

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கையில் இடுக்கி... அடுப்பில் இறைச்சி... உலகச் சாதனையை முறியடிக்க தென்னாப்பிரிக்கர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமைக்கத் தொடங்கினர்!

தலைநகர் பிரிட்டோரியாவில் (Pretoria) இந்த முயற்சி நடைபெற்றது.

சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்த்தனர்.

அவர்களுக்காக 500 அடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரே நேரத்தில் அதிகமானோர் இறைச்சியைச் சுட்டுச் சமைத்த சாதனை தற்போது ஜப்பானிடம் உள்ளது.

2023ல் இஷிகாகி (Ishigaki) நகரில் 2,220 பேர் அந்தச் சாதனையைப் படைத்தனர்.

அதை முறியடிக்க விதிமுறையும் எளிதுதான்.

ஆனால் கண்டிப்பானது!

அனைவரும் குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு ஒரே நேரத்தில் சமைக்க வேண்டும்.

இடையில் வெளியேறினால் கணக்கில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இத்தகைய வெளிப்புறச் சமையலை ‘பிராய்’ (braai) என்பார்கள்.

இம்முறை கொத்திறைச்சி (Sausage), பர்கர் (Burger), மாமிசத் துண்டுகள் என அடுப்புகள் நிறைந்திருந்தன.

கடந்த ஆண்டு இதே முயற்சி தோல்வியில் முடிந்தது.

பலர் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறியது அதற்குக் காரணம்.

இம்முறை சாதனை முறியடிக்கப்பட்டதா?

ஆதாரங்களை கின்னஸ் உலகச் சாதனை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

இறுதி முடிவு விரைவில் வெளியாகலாம்.
ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்