Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிரமப்பட்டபோது உதவிய நிறுவனத்துக்கு நன்றி - பொறியாளரின் கண்ணீர்க் கதை

வாசிப்புநேரம் -
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் பொறியாளர்...

எதிர்பாரா விதமாக வேலை போனது.

பல வேலை வாய்ப்புகள் இருந்தாலும் இறுதியில் சந்தித்ததோ நிராகரிப்பு...

கட்டணங்களைச் செலுத்த வேண்டும், வாழ்க்கையை நடத்த வேண்டும்..

சென்னையைச் சேர்ந்த திரு ரியாஸுடின் (Riyazuddin) தாம் கடந்து வந்த பாதையைப் பற்றி LinkedIn தளத்தில் பகிர்ந்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க அவர் விநியோகச் சேவைகளை வழங்கும் Swiggy நிறுவனத்தில் சேர்ந்தார்.

கொளுத்தும் வெயில், கடும் மழை என்று பல சவால்களிடையே அவர் விடாமுயற்சியுடன் பணியைத் தொடர்ந்தார்.

இப்போது புதிய நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.

கடினமான சூழலில் தமக்குக் கைகொடுத்த Swiggy நிறுவனத்திற்கு அவர் தம்முடைய பதிவில் நன்றி தெரிவித்தார்.

"சிரமத்தை எதிர்நோக்கும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்" என்றார் திரு ரியாஸுடின்.

அவருடைய மன உறுதியை இணையவாசிகள் பலர் பாராட்டினர்.
ஆதாரம் : Others/LinkedIn

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்