Skip to main content
சூரியக் கிரகணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

சூரியக் கிரகணம் - எங்கே தெரியும்?

வாசிப்புநேரம் -
சூரியக் கிரகணம் - எங்கே தெரியும்?

(படம்: Pixabay)

இந்த ஆண்டின் முதல் சூரியக் கிரகணக் காட்சியை ஒருசில இடங்களில் மட்டுமே பார்த்து ரசிக்கமுடியும்.

“நெருப்பு வளையம்” என்று அது அழைக்கப்படுகிறது.

அண்டார்ட்டிக்காவிலிருந்து அதை நன்கு பார்க்கமுடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சூரியன், சந்திரன், பூமி... மூன்றும் ஒரே கோட்டில் ஒன்றிணையும்போது சூரியக் கிரகணம் ஏற்படுகிறது.

நிலவு பூமியிலிருந்து சூரியனின் வெளிச்சத்தைப் பாதியாகவோ முழுவதுமோ மறைத்து ஒரு நிழலை உருவாக்கும்.

நிலவு ஒரே பாதையில் பூமியிலிருந்து சற்றுத்தள்ளி இருக்கும்.

முழுமையாகச் சூரியனை மறைப்பதில்லை.

அதன் வெளிப்புறத்தில் ஒரு மெல்லிய வளையம் போன்ற ஒளி மட்டும் தென்படும்.

சூரியக் கிரகணம் ஆண்டில் சிலமுறை நிகழ்ந்தாலும் அதைச் சந்திரனின் நிழல் விழும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காண முடியும்.

அந்தக் காட்சியை அண்டார்ட்டிக்காவின் சில பகுதிகளில் காணலாம்.

மக்களை மட்டுமல்லாமல் பென்குவீன்களும் சூரியக் கிரகணத்தை அனுபவிக்கமுடியும்.

தெற்கு சிலி, அர்ஜெண்டினா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா போன்றவற்றிலும் கிரகணத்தைக் காணலாம்.

கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதற்காகவே உள்ள சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்