மீன்களுக்கு உணர்வுகள் உண்டா?
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
மீன்களுக்கும் உணர்வுகள் இருப்பதாக ஜப்பானிய மீன் காட்சியகத்தில் உள்ள ஒரு மீன் உணர்த்தியுள்ளது.
மாம்போ (Mambo) எனும் அந்த மீன் Sunfish ரகத்தைச் சேர்ந்தது.
சென்ற மாதம் (டிசம்பர் 2024) மீன் காட்சியகம் மேம்பாட்டுப் பணிகளுக்காக மூடப்பட்ட பிறகு அது நோய்வாய்ப்பட்டது.
அது ஜெல்லிமீன்கள் உண்பதை நிறுத்தியது, வயிற்றை மீன் தொட்டிமீது உரசிக்கொண்டிருந்தது. அதனால் அதற்குச் செரிமானப் பிரச்சினைகள் இருக்கலாம் என்று பராமரிப்பாளர்கள் எண்ணியதாக Mainichi Shimbun நாளேடு தெரிவித்தது.
அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், மாம்போவைப் பார்க்க மக்கள் வராததால் அது தனிமையில் கவலையாக இருக்கலாம் என்று சொன்னதாக மீன் காட்சியகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தது.
அதனால் மனிதர்களின் முகங்கள், சீருடைகள் கொண்ட படங்களுடன் ஊழியர்கள் மீன் தொட்டியை அலங்கரித்தனர்.
அடுத்த நாளே மாம்போவின் உடல் நலம் தேறியது.
இவ்வாண்டு கோடைக்காலத்தின்போது காட்சியகத்தில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்து மீன் காட்சியகம் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : Others